THUPPAKKI NAATKAL (TAMIL): ?????????? ??????? (Tamil Edition) PDF - ePUB »கலை நிகழ்ச்சிக்காக தலைநகர் சென்ற இடத்தில் ராம்குமாரிடம் எதிர்பாராமல் வந்து சேர்கிறது தேசத்தின் முக்கிய பொறுப்பு. அங்கு துவங்குகிறது, எதிரிகளுக்கும் அவனுக்குமான கண்ணாமூச்சி ஆட்டம்.
தேடலும், துரத்தலும், ஏமாற்றமும், துரோகமும், துல்லியமான திட்டமிடுதலுமாக எதிரிகளின் வலை அவனை மட்டுமன்றி அவனைச் சுற்றியுள்ளவர்களையும் சேர்ந்து இறுக்க, இறுக்க.. அவனுடைய ஒவ்வொரு முயற்சியும் அபாரமாக எதிரிகளால் சிதைக்கப்படுகிறது.
தன்னுடைய ஒவ்வொரு ஸெல்லையும் துடிப்பாக வைத்திருக்கவேண்டிய அவசியத்தை உணர்கிறான், அவன். அவன் சந்திக்கும் சவால்களை சுவாரசியமான திருப்பங்களுடன் விவரிக்கிறது, சுபாவின் ஜெட் வேக நாவல்.